Sunday, March 15, 2020

கரும்புள்ளி நீங்கி முகம் பொலிவுடன் இருக்க...

கரும்புள்ளி நீங்கி முகம் பொலிவுடன் இருக்க கைமருந்து, சித்தமருத்துவம்

Home medicine and siddha medicine to get rid of black spot and to gain face brightness.
 

வாழைப்பழத்தை மசித்து பால் கலந்து முகத்தில் பூசி, சில நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.

Apply the mixture of banana mashed with milk on the face. After few minutes wash it with water. It will increase the brightness of your face.

பாதாம் பருப்பு, தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவு எடுத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.

Apply the mixture of almonds, honey and yoghurt in equal amounts on the face and wash it with water after a while. It will increase the brightness of your face.


தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினாலும், முகம் பொலிவுடன் காணப்படும்.

Wash your face with the mixture of honey and milk and wash it off after a while. It will increase the brightness of your face.


கோதுமை தவிடுடன் பால் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர சிறிது நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.

Apply the mixture of wheat bran and milk on the black spot and it will disappear in a few days.

முருங்கை இலைச்சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தடவினால், கரும்புள்ளிகள் நீங்கும். 

Apply the mixture of drumstick leaves, lemon juice and honey on the black spot. It will slowly remove the black spots.

பப்பாளி பழத்தை மசித்து தேன் கலந்து முகத்தில் தடவினாலும், நல்ல பலன் கிடைக்கும்.

Apply on the face the mixture of papaya fruit and honey. It will remove the black spots.


ரோஜா இதழ் மற்றும் பாதாம் பருப்பை அரைத்து முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவி வர, கரும்புள்ளிகள் மறையும்.

Grind the rose petals and almonds together. Apply the mixture on the face and wash them off after a while. It will remove the black spot.

கடலை எண்ணெய் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு சம அளவு கலந்து அவற்றை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.

Mix equal quantities of peanut oil and lemon juice and rub the mixture in the dark spot. Wash the face after 15 minutes. It will remove the black spot.

உருளைக்கிழங்கு சாறை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.

Rub the black spot using potato juice and wash it off after a while. It will remove the black spot.


எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவி வர கரும்புள்ளிகள் மறையும்.

Rub the mixture of lemon juice and glycerin on the black spot. It will remove the black spot.

No comments: