Saturday, August 14, 2021

சிரித்து வாழ வேண்டும்...

உலக வாழ் உயிரனங்களில் மனிதன் மட்டுமே சிரிக்க முடியும். நோய்விட்டுப் போக மனம்விட்டு சிரியுங்கள் என்பார்கள். ஆம்
சிரிப்பு உலகை ஆளும் உன்னத சக்தி. மனதை மயக்கும் மந்திர சக்தி. அனைவரையும் கவரும் அற்புத சக்தி. ஒவ்வொருவரையும் நீண்ட நாள் வாழ வைக்கும் நிரந்தர சக்தி...

பூமியில் வாழும் எந்த உயிரினங்களுக்கும் கொடுக்காமல், மனிதனுக்கு மட்டுமே அமைந்த விலைமதிக்க முடியாத மிக உயர்ந்த வரம் சிரிப்பு...
.
சிரிப்புக்கு மொழி, சாதி, மதம், ஆண், பெண், ஏழை, பணக்காரர் என்ற பேதமில்லை. அனைவரும் பொதுவாக பயன்படுத்தும் ஒரே மொழி சிரிப்பு மட்டும்தான்...

சிரிப்பு நம்மிடம் இருக்கும் போது கோபம், பொறாமை, அச்சம், வெறுப்புணர்வு காணாமல் போய் விடுகிறது...
 
வாழ்க்கை என்பது ஒரு தராசு போன்றது. ஒவ்வொரு நாளும் தராசு நம்முன் துாக்கிப் பிடிக்கப்படுகிறது. ஒரு தட்டில் மகிழ்ச்சியை வைக்கிறோம்...

மறுதட்டில் கோபம், எரிச்சல், ஆத்திரம், சோம்பேறித்தனம் போன்றவைகள். நாமோ அல்லது நம்மைச் சார்ந்தவர்களாவோ அடுக்கப்படுகிறது...
 
மகிழ்ச்சி தட்டை விட இந்த தட்டு கனம் அதிகமாகி கீழே இறங்கிவிடுவதால், அந்த நாள் மகிழ்ச்சியற்ற நாளாக கடந்து போய் விடுகிறது...

ஒவ்வொருவருடைய மகிழ்ச்சியை அவரவர் மனமே தீர்மானிக்கிறது. அந்த மனம் பக்குவப்பட, மனம் மிதமாக நமக்கு வழங்கப்பட்ட அருட்கொடை தான் சிரிப்பு...

என்னதான் பணம், பதவி, உறவுகள் என எல்லாம் இருந்தாலும், நாம் விலை கொடுத்து வாங்க முடியாத விஷயங்களில் ஒன்றுதான் மகிழ்ச்சி...

நாம் நினைத்தால் யாரை வேண்டுமானாலும், ஒரே மணித்துளிகளில் கோபப்பட வைத்துவிடலாம்...

ஆனால்!, அந்த நபரை சில விநாடிகளுக்குள் சிரிக்க வைக்க முடியாது. அதுதான் கோபத்திற்கும், மகிழ்ச்சிக்கும் உள்ள பெரிய வேறுபாடு...

*ஆம் நண்பர்களே...!*

 *இந்நிலை மாற, குடும்பங்களில் மகிழ்ச்சி நிலைக்க, வீடுதோறும் புன்னகை என்ற மலரை நடுங்கள்...!*

 *அதற்கு தண்ணீர் என்ற மலரை இதயங்களுக்குள் பாய்ச்சுங்கள்...!!*

 *கவலை என்ற களைக் கொல்லியை வேரோடு பிடுங்கி, ஆனந்தம் என்ற மலரைத் தூவினால், இல்லம் மகிழ்ச்சி என்னும் கடலில் மூழ்கும்...!!!*

📣📣📣📣📣📣📣📣📣📣📣📣

No comments: