நினைவு தெரிஞ்ச நாள் முதலாக, 10ம் வகுப்பில் 350க்கு மேல் எடுப்பதே அபூர்வம். +2வில் 900க்கு மேல் எடுத்தால் மாநில முதலிடம். காலேஜில் ஃபர்ஸ்ட் கிளாஸ் பாஸ் அதாங்க. 60% மதிப்பெண் வாங்கினால் பரம்பரை சாதனை.
பேங்க்ல மேனேஜர் இல்லனா சொந்த ஊர்லயே ஸ்கூல் வாத்தியார் உத்யோகம். அப்படியும் இல்லனா படிப்புக்கேற்ற அரசு வேலை வீடு தேடி வரும்..என்ஜீனியர், டாக்டர் படிக்கறவங்க ரொம்ப கம்மி. தடக் தடக் என எப்போதோ போகும் ரயில் பயணங்கள்..500/1000 ரூபாயில் மாச பட்ஜெட்...
தெருவுக்கு ஒரு வீட்டில் ஃபோன் கனெக்ஷன்,தாமதமாக வரும் அரசு பேருந்துகள், ஓணாண், பச்சைப் பாம்பு, உடும்பை பிடிச்சு கயிறில் தொங்கவிடும் அண்ணன்கள், அஜந்தா பாக்கு போடவே பயப்படும் பள்ளி மாணவர்கள்..டீக்கடைகளில் ஒலிக்கும் இளையராஜா பாடல்கள், காலை, மாலை சரோஜ் நாராயணசாமி செய்திகள். நேயர் விருப்பம் அப்துல் ஹமீத், சுராங்கனி பாடும் சிலோன் மனோகர், சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே பாடும் நித்தி கனகரத்தினம். வயலும், வாழ்வும்..
பழைய சோறே தேவாமிர்தம், தாகத்திற்கு தெருக்குழாய் தண்ணீர்,மியாமி குஷன் செருப்பு விளம்பரத்தில் நடிக்கும் இளம்வயது அஜித்..
தீபாவளி, பொங்கலுக்கு வந்துபோகும் உறவினர்கள், ஆடி 18 எண்ணெய் குளியல், மேகங்களில் தெரியும் விநோத உருவங்கள், அகண்ட வானம் பார்த்து, கதை பேசி சிரித்து மகிழ்ந்த நாட்கள், எக்கோ தரும் மலை முகடுகள், அந்த கால புல்லட்டுடன் பயணித்த ராஜ்தூத், ஜாவா, யெஸ்டி ஆகிய வாகனங்கள் மனிதர்கள்.. சச்சின் 50 அடிக்கலனா சாப்பிட மறுத்த ரசிகர்கள்..பக்கத்து வீட்டு மாமா மாதிரி தோன்றிய கபில் தேவ். பிரசாந்த், அரவிந்த்சாமி படம் மட்டுமே பார்க்கும் ரசிகைகள், சலுன் கடைகளில் ஆக்ரோஷமான புரூஸ்லீ, ஸ்டைலான ரஜினி, கமல் ஸ்டில்கள்..காலையில் கராத்தே கிளாஸ்,

அகண்ட திரையில் சண்டை போடும் எம்ஜிஆர், விஜயகாந்த்.. மாரடோனாவை நினைத்து வெறும் காலில் ஆடும் ஃபுட்பால், பிக் ஃபன் பபிள் கம் வாங்கினால் கிரிக்கட் ஸ்டிக்கர் ஃப்ரி, குழந்தைகளை காப்பாற்றும் சக்திமான், சிரிக்க வைக்கும் மிக்கி மவுஸ், டாம் அண்ட் ஜெர்ரி..வெயிலுக்குப் பயந்து லைப்ரரி ஃபேன் காற்றில் கிடைத்ததை படிக்கும் இலக்கிய ஆர்வலர்கள், ஈழத் தமிழர் நிவாரணம் திரட்டும் அரசியல் கட்சிகள்.. படகுகளில் வந்திறங்கும் தமிழ் அகதிகள்.ராஜிவ் காந்திக்காக அடிவாங்கும் திமுக தொண்டன், அரசியலில் குதிப்பதாக ஆர்ப்பரித்த ரஜினிகாந்த்..இதயம் முரளி, லவ் டுடே விஜய், பெப்ஸி உமா...
கோயிலுக்குப் போக மட்டும் வீட்டை விட்டு வெளியே வரும் பெண்மணிகள், லேடிஸ் சைக்கிள் ஓட்டும் அக்காக்கள், பெருமாள் கோயில் துளசி தீர்த்தம், பிரியாணி தரும் 'பாய்' ஃபிரண்ட், ஒயின் குடிச்சிட்டு சீன் போடும் கான்வெண்ட் ஸ்டூடண்ட், ், வந்தே மாதரம் பாடும் ஏஆர் ரஹ்மான், சிலோன் பரோட்டா,சேமியா ஐஸ், 5 ரூபாய்க்கு பேரம்பேசி பனை ஓலையில் வாங்கிய நுங்கு, துபாய் செண்ட், துபாய் டெக் வீடியோ, சில்க் சட்டை, பம்ப் செட் கிணறுகளில் குளியல்..
ஸ்கூல் எக்ஸ்கர்ஷன், ட்யூஷன் கட்,, நைட் ஷோ சினிமாக் காட்சி..வாஷிங் பவுடர் நிர்மா,,வாஷிங் பவுடர் நிர்மா விளம்பரம்,,, டைப் ரைட்டிங், கிளாஸ்,, இன்னும்,,இன்னும்,,
அப்போது தெரியல. இப்போது புரிகிறது.. நாம் சொர்க்கத்தில் இருந்து, நரகத்திற்குப் பயணப்படுகிறோம்..
No comments:
Post a Comment