Friday, September 8, 2017

உண்மை சம்பவம் - டாக்டர் மாற்கு


டாக்டர் மாற்கு என்கின்ற மிகவும் பிரபலமான புற்றுநோய் சிறப்பு மருத்துவர் ஒருவர் இருந்தார். ஒருநாள் அவர் தனது மருத்துவ கண்டுபிடிப்பிற்கான விருது ஒன்றினைப் பெறுவதற்காக நடைபெறும் மிகவும் முக்கியமான கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ளவதற்க்கு அருகில் உள்ள மாநிலத்திற்க்கு  செல்ல விமான நிலையத்தில் நின்று கொண்டு இருந்தார்.
அவர் மிகவும் பதட்டத்தோடு இருந்தார். எப்படியாவது  அந்த இடத்திற்கு விரைவாக சென்று விடவேண்டும் என்று ஒரே குறிக்கோளோடு இருந்தார். அந்த கண்டு பிடிப்பிற்க்காக அவர் வெகுநாட்களாக மிகவும் கடினப்பட்டு உழைத்தவர் அவரது கடின உழைப்பின் பயன்தான் அந்த விருதை பெற்ற புதிய மருந்து. எனவே அவர் அந்த விருதினைப்பெற மிகவும் ஆவலாக இருந்தார்.
விமானம் புறப்பட்டது புறப்பட்ட சிறிது நேரத்திற்கெல்லாம் அவசரத்தின் காரனமாக  விமானம் பக்கத்து விமானநிலையத்தில் தரை இறங்கியது. தான் கூட்டத்தில் கலந்துக்கொள்ள முடியாமல் போய்விடுமோ என்ற பயத்தில் டாக்டர் மாற்கு வரவேற்பு அறைக்கு சென்று வேறு எதாவது விமானம் உள்ளதா என விசாரித்தார். அங்குள்ளவர்கள் அடுத்த பத்து மனிநேரம் சென்றால்தான் அடுத்த  விமானம் உள்ளது என்று கூறினார்கள். விரைவாகச்செல்ல வேண்டும் என்றால் ஒரு கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து நீங்களே ஓட்டிக்கொண்டு போகலாம் என்றும் அப்படி நீங்கள் சென்றால் நான்கு மணி நேரத்தில் சென்றுவிடலாம் என்றும் அவர்கள் ஒரு ஆலோசனையை கூறினார்கள். வேறு வழி இல்லாததால் அவ்வாறு செல்ல முடிவெடுத்தார். வண்டி ஓட்டுவது அவருக்கு பிடிக்காத ஒன்று எனவே வெறுப்போடு வாடகைக்கு கார் ஒன்றை எடுத்துக்கொண்டு தன் பயணத்தைத் தொடர்ந்தார். அவர் பயணத்தைத் தொடங்கியதும் திடீர் என்று காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு புயல் உண்டானது.
மழை மிகவும் கனமாக பெய்ததால் அவரால் காரை ஓட்ட இயலவில்லை. அவர் தான் திரும்ப வேண்டிய பாதையை மறந்து வேறு வழியில் சென்றுவிட்டார்.
இரண்டு மணிநேரம் காரை ஓட்டிய பின்புதான் வழி மாறியதை உணர்ந்தார். அவருக்கோ பசி, கலைப்பு, இளைப்பாறுவதற்கு எங்கேயாவது இடம் இருக்குமா என்று சுற்றிலும் தேடினார் ஒன்றும் காணவில்லை. பிறகு ஒரு இடத்தில் ஒரு வீட்டைக்கண்டார். அந்த வீட்டன் முன்பு சென்று காரைவிட்டு இறங்கி கதவை தட்டினார்.
அங்கு ஒரு ஏழை பெண் கதவை திறந்தாள், அவளிடம் தன் நிலையைக்கூறி அவளது   தெலைப்பேசியை பயன்படுத்துவற்காக உதவிக்கேட்டார். அவளோ தன்னிடம் தொலைப்பேசி இல்லை என்று கூறினால். மழை நிற்கும் வரை வேண்டுமானல் தன் வீட்டில் இருந்து விட்டு போகுமாறு கேட்டுக் கொண்டாள். பசி மற்றும் பதட்டத்தில் இருந்த டாக்டர் சரி  ஏன்று அந்த ஏழை பெண்ணின் வீட்டிற்குள் சென்று சேரில் அமர்ந்து கொண்டார்.
அவளோ அவருக்கு குடிப்பதற்கு டீயும் பிஸ்கட்டும் கொடுத்தாள். பின்பு அவள் தான் ஜெபம் செய்ய போவதாகவும் விரும்பினால் நீங்களும் ஜெபத்தில் கலந்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டாள். ஆனால் அந்த டாக்டர் மாற்க்கு   சிரித்துக்கொண்டே கூறினார் எனக்கு என்னுடைய கடின உழைப்பின் மீது தான் நம்பிக்கை உண்டு  எனவே நீ உன்னுடைய ஜெபத்தை செய்  நான் வரவில்லை என்றார்.
டாக்டர் மாற்கு அவள் ஜெபிப்பதைப் பார்த்துக்கொண்டு இருந்தார். அவள்  ஜெபத்தை முடித்ததும் அதைப் கவனித்த டாக்டருக்கு அவளுக்கு ஏதோ தேவைபடுகிறது என்று மட்டும் உணர்ந்தார். ஜெபத்தை முடித்த அவளிடம் எதற்க்காக இப்படி அழுது ஜெபிக்கிறாய்?  உனக்கு கடவுளிடம் இருந்து என்ன வேண்டும் நீ என்ன ஜெபித்தாய் என்று கேட்டார். அதற்க்கு அவள் என் குழந்தைக்காக வேண்டினேன் என்றால். பின்பு அந்த சிறு குழந்தையைப்பற்றிடாக்டர் மாற்கு விசாரித்தார்.
அவள் சோகமாக கூறினாள் தொட்டிலில் இருப்பது என் மகன் அவனுக்கு ஒரு புது விதமான புற்றுநோய் இருக்கிறது. இதற்கு மருந்து டாக்டர் மாற்கு என்பவரிடம் மட்டும்தான் உள்ளதாம். அவரால் தான் சிகிச்சையும் அளிக்க முடியமாம். ஆனால் என்னிடம் அதற்கான பணம் இல்லை. அவரும் வேறு ஊரில் இருக்கிறார் என்று கூறினாள். மேலும் என் தேவன் என் வேண்டுதலை இதுவரைக் கேட்கவில்லை ஆனால் தேவன் கைவிடமாட்டார் ஏதாவது ஒரு வழி காட்டுவார், நான் அவர் மீது உள்ள நம்பிக்கையை விட மாட்டேன் என்றாள்.
அப்படியே டாக்டர் மாற்கு அதிர்சியில்  நின்று விட்டார். அவரின் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. தேவன் எவ்வளவு பெரியவர் என்று அவர் மனதில் சொல்லிக் கொண்டே பின்பு நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் நினைத்துப் பார்த்தார். விமானம் பழுதடைந்தது, இடியுடன்கூடிய மழை,பாதை தவறியது,இந்த பெண்னை சந்தித்தது இவை அனைத்தும் தேவனின் சித்தப்படி தான் நடந்திருக்கிறது என்று அவளிடம் தன் விபரத்தை கூறி அந்த குழந்தைக்கு இலவசமாக சிகிச்சை கொடுத்தார்.  தேவன் இந்த பெண்ணின் ஜெபத்தை மட்டுமல்லாது  டாக்டருக்கும் அவரின் உலக வாழக்கையில் இருந்து விடுபட்டு 
தன் மருத்துவ பணியை ஏழை எளியவர்களுக்கு உற்ச்சாகமாய் செய்ய வழிகாட்டினார்.
தேவன் சரியான நேரத்தில் உதவுவதில் தவறுவதில்லை. தேவனால் முடியாதது ஒன்றுமில்லை.
தேவன் நம்முடைய ஜெபத்திற்க்கும்  அற்புதமாய் பதில் அளிக்கவல்லவர்.
தொடர்ந்து மனம் தளராமல் ஜெபிப்போம் சகோதர சகோதரிகளே....

No comments: