Saturday, September 9, 2017

பருவ மழைகாலமும்! பரவி வரும் நோய்களும்

➠ பொதுவாக மழைகாலம் என்பது ஒரு ஆண்டில், ஒரு இடத்தில் குறிப்பிட்ட அளவு பெய்யும் மழையின் சராசரி அளவு ஆகும். இந்த பருவகாலமானது இடத்திற்கு இடம் மாறுபடும்.
➠ தற்போது தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியுள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மழைக்கால நோய்கள் :
➠ இக்காலக் கட்டத்தில் ஆஸ்துமா, ப்ளு ஃ வைரஸ் ஜுரம், வயிற்றுபோக்கு, காலரா, பூஞ்சை நோய்கள், மலேரியா, டெங்கு, வைரஸ் காய்ச்சல், சீதபேதி, கண் சம்மந்தப்பட்ட நோய்கள், டைபாய்டு காய்ச்சல் மற்றும் சிக்கன் குனியா போன்ற நோய்கள் வரக்கூடும்.
மழைக்கால நோய்களில் பாதிக்கப்படாமல் இருக்க வழிமுறைகள் :
உணவில் சேர்த்து கொள்ள வேண்டியவை :
➠ மதிய உணவின்போது தூதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம். இவை சளி, காய்ச்சல் போன்ற நோய்களுக்கு சிறந்த தீர்வாகும்.
➠ இரவு தூங்குவதற்கு முன், பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது நல்லது. பொரியல் செய்யும்போது அவற்றில் மிளகு பொடியைச் சேர்த்துச் சமைத்து சாப்பிடுவது நல்லது.
➠ பால் மற்றும் பால் சார்ந்த தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றையும் அதிகம் சாப்பிடக்கூடாது. ஆனால் மோர் சாப்பிடலாம். உடலுக்கு நல்லது.
➠ தினந்தோறும் நாம் குடிநீரை சுத்தப்படுத்தி கொதிக்க வைத்து, ஆறிய பின்பே குடிக்க வேண்டும்.
➠ உண்ணும் உணவில் அதிக அளவில் காய்கள், பழங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். காய்கள், பழங்களை நன்கு கழுவிய பின்னரே சாப்பிடவேண்டும்.
➠ உணவில் காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் தினமும் சாப்பிடும் உணவையே சற்று சூடாக சாப்பிட்டால் போதுமானதாகும்.
உணவில் சேர்த்து கொள்ள கூடாதவை :
➠ இரவு உணவில் பச்சைப்பயறு, கேழ்வரகு, கீரை ஆகியவற்றைச் சேர்க்கக்கூடாது.
➠ எண்ணெயில் பொரித்த உணவுகளையும் அதிகம் சாப்பிடக்கூடாது.
➠ கடைகள் மற்றும் வெளியிடங்களில் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மழைக்காலங்களில் எல்லா காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
➠ சிலருக்கு தண்ணீர் சத்து அதிகமுள்ள காய்கறிகள் ஒத்துக்கொள்ளாது. நீர்ச்சத்துக்கள் நிறைந்த சுரைக்காய், பூசணி, புடலை, பீர்க்கன், வெள்ளரி போன்ற காய்கறிகளை, மழைக்காலங்களில் உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
சுற்றுப்புறச்சூழல் :
➠ நமது சுற்றுபுற சூழலில் இருக்கும் கொசுக்களிடம் இருந்து நம்மையும் நமது குடும்பத்தினரையும் பாதுகாக்க உரிய பாதுகாப்பு செய்து கொள்ளவேண்டும்.
➠ தெருக்களில் மழைகாலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், தெரிவித்து அதற்கு உரிய நடவடிக்கைகள் செய்ய சொல்ல வேண்டும்.
➠ நமது வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும். அவசரத் தேவைகள் எனில் மருத்துவரை அணுகி உரிய மருத்துவ சிகிச்சை பெற்று கொள்ளவேண்டும்.
➠ மேலும், அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் தற்காப்பு நடவடிக்கைகளை தவறாமல் மேற்கொள்ள வேண்டும். அரசு மருத்துவ முகாம்களை நடத்த ஏற்பாடு செய்யும் தருணங்களில் அதில் கலந்து கொண்டு ஆலோசனை பெற்று அதன்படி நடந்து கொள்ளவேண்டும்.
எண்ணம் மற்றும் எழுத்தாக்கம்  
ச.நடனம்.
சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் திருவாரூர்

No comments: