Saturday, March 17, 2018

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது... அம்மாவா? அப்பாவா?

*உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை விட அதிகம் தேவை அப்பா தான் !*
*உறவு முறைகளிலேயே மிகவும் அழுத்தமானது தந்தைக்கும் மகளுக்குமுள்ள உறவு தான்* *என்கிறார்கள் பல அறிஞர்கள் !*
*தந்தையின் சரியான வழிகாட்டுதல் , அன்பு , அரவணைப்பு இல்லாதது தான் எல்லாவித பிரச்சினைக்கும் மூல காரணம் !*
*ஒரு டீன் ஏஜ் மகளுக்கு , அப்பா என்பவர் வெறும் ஒரு நபரல்ல ஒரு நண்பன் ! பாதுகாவலன் ! ஊக்கமூட்டுபவர் ! உற்சாகப்படுத்துபவர் ! தன்னம்பிக்கை வளர்ப்பவர் !*
*நம்பிக்கை ஊட்டுபவர் !* *பண்புகளை ஊட்டுபவர் !*
*வழிகாட்டி !*
*என எக்கச்சக்க முகங்கள் அவருக்கு இருக்க வேண்டும்*.
*ஒரு பெண் முதலில் சந்திக்கும் ஆண் அவளுடைய அப்பா தானே ?*
*அப்பாவிடமிருந்து தான் அவள் ஒரு ஆணுக்குரிய இலக்கணங்களைக் கற்றுக் கொள்கிறாள்.*
*ஆண் என்பவனின் குணாதிசயங்களைக் கற்றுக் கொள்கிறாள்*.
*ஆண் என்பவரின் தேவையைக் கண்டு கொள்கிறாள்*.
*எனவே மகள் மழலையாய் இருக்கும் போதே எல்லா வகையிலும் முன் மாதிரியான வாழ்க்கை வாழ வேண்டியது அப்பாவின் கடமையாகிறது*.
*சின்ன வயதில் மழலையாய் சிரித்துச் சிணுங்குகையில் , அழகழகாய்* *ஆடைகள் வாங்கிக் கொடுப்பதானாலும் சரி , பென்சில்  , இரப்பர் வாங்குவதானாலும் சரி ரொம்பவே ஈடுபாடு காட்டுவீர்கள்*.
*என எல்லாவற்றையும் தேடித் தேடி வாங்குவீர்கள்*.
*மகளும் ரொம்பவே சமர்த்தாய் உங்கள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தம் தருவாள்*.
*திடீரென ஒரு நாள் பார்த்தால் , சட்டென்று வளர்ந்து நிற்பாள். "என் டாடி சூப்பர் " என்று சொல்லிக் கொண்டிருந்தவள் ,* *"டாடிக்கு ஒண்ணும் தெரியாது "என்று பல்டி அடிப்பாள்*.
*எல்லாவற்றுக்கும் காரணம் அவளுடைய உடல் , மன மாற்றங்கள் தான்*!
*என் பொண்ணுக்கு என்னைக் கண்டாலே புடிக்கல*.
*அவளுக்கு நான் இனிமே தேவையில்லை என்றெல்லாம் புலம்பாதீர்கள்*
*ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்* *உங்கள் மகள் உங்கள் மகள் தான்*
*உங்கள் மீதான பாசமும் , அன்பும் , கரிசனையும் எப்போதுமே அவளிடம் நிரம்பி இருக்கும்*.
*ஆனால் அவளுடைய வெளிப்படுத்தும் வித்த்தில் தான் மாற்றங்கள்*
*"டாடி பிளீஸ்....டாடி... வாங்கிக் கொடுங்க டாடி " என்று சின்ன வயதில் கெஞ்சிய மகள் "டாட்....* *எனக்கு இது வேணும்*.
*முடியுமா ?!* *முடியாதா ? " என பிடிவாதம் பிடிப்பாள்*.
*உடனே நீங்கள் பதட்டப்படுவீர்கள்*.
*ஆனால் உண்மையில் அவள் உங்களுடைய அனுமதியை எதிர்பார்த்து நிற்கிறாள்*.
*அப்பாவின் அனுமதி இருந்தால்தான் அவளுக்கு அதில் ஒரு ஆத்ம திருப்தி*.
*நீங்க பாட்டுக்கு எல்லாவற்றையும் சகட்டு மேனிக்கு நிராகரித்துத் தள்ளாதீர்கள்*.
*"நல்லது ன்னா அப்பா ஒத்துப்பார் "*
*என்னும் நிலமைதான் இருக்க வேண்டுமே தவிர " அவர் கிட்டே என்ன சொன்னாலும் வேலைக்காவாது " என்ற நிலைக்கு நீங்கள் வந்து விடவே கூடாது*.
*பேசுவதை விட மிக மிக அதிகமாய் மகள் பேசுவதைக் கேட்க வேண்டும்*. *அது தான் முக்கியம்.*
*ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்*
*"என் அப்பா டெக்னாலஜியில் என்னைப் போல ஹைடெக்.."என கருதுவதில் உங்கள் மகளுக்கு இருக்கும் மகிழ்ச்சி அலாதியானது*.
*நீங்கள் அந்த டெக்னாலஜி உலகுக்குள் நுழைந்தால் தான் அதிலுள்ள நன்மை தீமைகளை நாசூக்காக உங்கள் மகளுக்குச் சொல்லவும் முடியும்*.
*இன்னொரு விஷயம் , *உங்கள் மகள் பருவத்துக்குரிய வனப்புடன் வளர்கிறாள் என்றதும் தள்ளியே நிற்காதீர்கள்.*
*அது மன அளவில் உங்கள் டீன் ஏஜ் மகளைப் பாதிக்கும் என்கின்றனர் உளவியலார்கள்.*
*உங்கள் மகளின் தோளைத் தட்டிப் பாராட்டுவதோ ,* *தலையைக் கோதிப்* *பாராட்டுவதோ ,*
*செல்லமாய் அரவணைத்துக் கொள்தலோ அவளுக்கு ரொம்பவே தேவை*.
*அடிக்கடி வெளியே கூட்டிப் போங்கள்.*
*ஐஸ்கிரீம் பார்லர் போன்ற இடங்களுக்கு ஜாலியாகப் போய் வாருங்கள்.*
*மகளுடன் நிறைய நேரம் செலவிடுங்கள். நிறைய நேரத்தை நீங்கள் அவளுடன் செலவிடும்போது அவளுக்கு இயல்பான உரையாடல் சாத்தியப்படுகிறது.*
*நினைத்ததை எப்படியேனும் வெளிப்படுத்தி விடுவாள்*.
*அவள் பள்ளியிலோ , கல்லூரியிலோ ஏதேனும் விழா நடக்கிறது ,*
*அழைக்கிறாள் என்றால் தவற விடாதீர்கள்.*
*வெறுமனே நீங்கள் அவளுடன் இருந்தால் போதும் அவள் உங்களை ரொம்பவே கொண்டாடுவாள்*
*நீங்கள் அவளை அன்பு செய்கிறீர்கள்*.
*சரி ! மதிக்கிறீர்கள்*.
*சரி ! ஆனால் அதை அவளிடம் வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறீர்களா ?*
*இல்லையேல் அதைச் சொல்லுங்கள் முதலில்*.
*டீன் ஏஜ் மனது எதிலும் வெளிப்படையாய் இருக்க விரும்பும் மனது*.
*சுற்றி வளைத்து எதையும் பேசாமல் , உங்கள் மகளை நீங்கள் மதிக்கிறீர்கள் , அன்பு செய்கிறீர்கள் என்பதைச் சொல்லி விடுங்கள்*.
*டீன் ஏஜ் மகளின் தினசரிகள் பல்வேறு அனுபவங்களால் நிரம்பி வழியும்*.
*ஆனந்தம் , கவலை , எரிச்சல் , சோகம் என எக்கச்சக்க உணர்வுகள் நிரம்பி வழியும்.*
*சக தோழிகளின் கிண்டல் , படிப்பு , அழகு என கண்டதுக்கும் கவலைப்படும் வயது அது.*
*அதை முதலில் நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்*.
*"எதுவானாலும் கவலையில்லை .... அப்பா இருக்கிறார்"*
*என்னும் நம்பிக்கையை நீங்கள் உங்கள் மகளிடம் ஊற்ற முடிந்தால் அதை விடப் பெரிய விஷயம் ஏதும் இல்லை. அதற்கு மகளிடம் உண்மையாய் இருக்க வேண்டியது உலக மகா தேவை !*
*எந்தக் காரணம் கொண்டும் அவளைத் திட்டாதீர்கள்*.
*அவள் என்ன தான் மிகப் பெரிய தவறு செய்திருந்தாலும் சரி , உணர்ச்சி வசப்படாதீர்கள். பிரச்சினைகள் –விளைவுகள் – தீர்வுகள் என சிந்தியுங்கள்*.*
*நீங்கள் பதட்டப்பட்டு உங்கள் கோபத்தையும் , ஆத்திரத்தையும் மகளிடம் காட்டி விட்டால் போச்சு*.
*அது வீட்டைப் பூட்டி சாவியை தூர எறிவதற்குச் சமம்.*
*உங்கள் மகள் அதன் பின் உங்களிடம் எதையும் பேசுவாள் என்று சொல்வதற்கில்லை*.
*எப்போதும் அவளிடம் தோழமை உணர்வுடன் பழகுங்கள்*.
*அடிக்கடி உங்கள் மூடு மாறாமல் இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம்*.
*"அப்பா எப்போ அமைதியா இருப்பாரு,எப்போ எரிஞ்சு விழுவாரு ன்னு தெரியாது " என்னும் நிலமை வந்தால் சிக்கல் தான்.*
*அவளுடைய படிப்பு , நட்பு , எல்லாவற்றிலும் உங்கள் அளவான ஈடுபாடு இருக்கட்டும்*.
*"அவளுக்கு இதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை" என்று மட்டும் எப்போதும் நினைக்காதீர்கள்.*
*குறிப்பாக ஆண்களைப் பற்றியும் ,ஆண்களின் குணாதிசயங்கள், சிந்தனைகள் , எதிர்பார்ப்புகள் போன்றவற்றைப் பற்றியும் அவளுக்குப் புரியும் வகையில் அவ்வப்போது சொல்வது அவசியம்*.
*வெளுத்ததெல்லாம் பாலல்ல என்பதை அவள் தெரிந்து கொள்ள வேண்டும்*.
*சமூகம் சார்ந்த பல அறிதல்களையும் அப்பாதான் அவளுக்குச் சொல்லித் தர வேண்டும்*.
*ஒரு ஆச்சரிய உண்மை என்னவென்றால் , பதின் வயதுத் தொடக்கத்தில் இருக்கும் மனோபாவம் நாள் செல்லச் செல்லப் பக்குவப்படும்*.
*பெண்ணின் திருமண வயது வரும்போது " அப்பா தான் உலகம் "எனும் நிலைக்குப் பெண்கள் வந்து விடுவார்கள். அதுவரை சலிக்காத வழிகாட்டலும்*,
*பொறுமையான அணுகு முறையும்,நிபந்தனையற்றை அன்பும் நீங்கள் காட்ட வேண்டியது அவசியம்*.
*‍‍~சின்ன வயதிலிருந்தே தந்தையின் வழிகாட்டுதலிலும், அன்பிலும் வளரும் குழந்தைகள் நல்ல மன வளர்ச்சி அடையும் என்கிறார் எழுத்தாளரும் மருத்துவருமான மெக் மீக்கர்.~*
*_"ஸ்ட்ராங் ஃபாதர்ஸ்,ஸ்ட்ராங் டாட்டர்ஸ்"_*
*என்னும் நூலில் அப்பாவின் வழிகாட்டுதலே டீன் ஏஜ் பெண்களுக்கு மிக மிகத் தேவை என்கிறார்*.
*‍‍"என் பொண்ணோட வாழ்க்கையில் மிக முக்கியமான நபர் நான் "என்னும் எண்ணம் அப்பாக்களுக்கு வர வேண்டியது தான் முதல் தேவை என்கிறார் இவர்*.
*‍‍~"என் அப்பாவைப் போல நல்ல ஓர் ஆண் எனக்குக் கணவனாக வர வேண்டும்" என உங்கள் மகள் நினைக்க வேண்டும்.~**
*அப்படி நடந்தால் நீங்கள் ஒரு அப்பாவாக வெற்றி பெற்று விட்டீர்கள் என்று பொருள்*
*இது மகளை பெற்ற அப்பாக்களுக்கு எனது சமர்ப்பணம்*
           *வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?*
*அப்பாவா ?*

No comments: