Saturday, April 14, 2018

ரிசர்வேசன் ( எ ) இட ஒதுக்கீடு : பாகம் - 16

பாபாசாகேப் இலண்டன் சென்று வெள்ளைகாரர்களிடம், ''நீங்க இப்போதுவரைக்கும் இந்தியாவை ஆட்சி செய்றீங்கன்னா, அது என் மக்களின் ஆதரவாலும், போராட்டத்தாலும்தான். என் மக்களாலேதான் நீங்கள் ஆட்சி செய்தீங்க. ஆனால் நீங்க எங்க நாட்டை விட்டு போகும்போது என் மக்களின் நன்மைகளை, எங்கள் எதிரிகளின் கையில் ஒப்படைச்சிருக்கீங்க. அவங்க மறுபடியும் 'மனுஸ்மிருதி'யை அடிப்படையாக கொண்ட அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்க தயாராயிட்டாங்க. அதுக்கு காரணமே நீங்கதான். அதனால நான் உங்களிடம் வேண்டுதல் செய்ய வரவில்லை. எச்சரிப்பதற்காக வந்திருக்கிறேன். நீங்க என் மக்களின் உரிமையை அவன் கையில் கொடுத்தீங்கன்னா, என் மக்கள் இனிமேல் சும்மாயிருக்க மாட்டார்கள். நீங்கள் என்ன பண்ணுவீர்களோ எனக்கு தெரியாது. மனுஸ்மிருதியை தடுக்கணும்னா, நான் சட்ட வரைவுக்குழுவில் இருக்கணும். வரைவுக்குழுவில் இருக்கணும்னா நான் பார்லிமெண்ட்டில் போகணும் என் மக்களின் உரிமைக்காக. இதை நீங்க அனுமதிக்கலைன்னா, நான் என் மக்களுடன் ஆயுத போராட்டம் செய்யவும் தயாராயிருக்கிறோம். நாங்க ஜெயிப்போமோ, தோற்போமோ அது எங்களுக்கு தெரியாது. ஆனால் எங்கள் இரத்தத்தாலே உங்கள் உடைகளில் படும் கறை இந்த உலகம் அழியும்வரையில்  போகாது'' என எச்சரித்ததால் வெள்ளைக்காரன் வெலவெலத்து போனான். பாபாசாகேப்பிடம் அட்லி பிரபு ''நீங்க போங்க, நிச்சயமாக செய்றோம்'' என அனுப்பிவிட்டு, அப்போதைய எதிர்கட்சி தலைவரான வின்ஸ்டன் சர்ச்சிலிடம் சுமார் 1:30 மணிநேரம் விவாதித்து, கடைசியாக பாபாசாகேப்பிடம், ''டாக்டர். அம்பேத்கர் உங்க மக்களின் உரிமைகளை பாதுகாப்பது எங்கள் பொறுப்பு. தைரியமாக போங்கள்'' என உறுதியுடன் கூறினார்.

உடனே அட்லி காங்கிரசின் காந்தி, படேலை காரி துப்பி, ''டாக்டர். அம்பேத்கர் எந்த இடத்தில் ஜெயித்து வந்தாரோ, அதே இடத்தில் அவர் வர வேண்டும். இல்லேன்னா வேறு தொகுதியிலாவது ஜெயிக்க வேண்டும். ஜெயிச்சதும் அவர் சட்ட அமைச்சராகணும். அது மட்டுமல்ல அவர் சட்ட வரைவுக்குழுவில் இடம் பெற்றாக வேண்டும். இதெல்லாம் செய்த பிறகு தகவல் அனுப்புங்கள். அதன்பிறகே உங்களுக்கு அதிகாரத்தை கொடுப்போம்'' என ஆணையிட்டார். காங்கிரசார் உடனே லண்டனிலிருந்து திரும்பிய பாபாசாகேப் கையில், காலில் விழுந்து அமைச்சர் பதவி ஏற்க வேண்டும் என வேண்டினார்கள். ''நான்தான் மெம்பராக கூட இல்லையே'' என்றவுடன் மகாராஸ்டிராவிலுள்ள ஒரு தொகுதியை வாபஸ் பெற்றதால், அதில் அன்ன போஸ்ட்டாக ஜெயிக்கிறார். ஜூலை 31 1943 அன்று சட்ட அமைச்சராக பொறுப்பேற்றார். சட்ட வரைவுக்குழுவிலும் இடம் பெற்றார். சட்ட வரைவுக்குழுவில் 7ல் 4 பேர் பார்ப்பனர், ஒரு முஸ்லிம், ஒரு பார்சி இடம் பெற்றனர். இந்த 7 பேருக்கும் பிரிட்டிஷார் ஒரு கண்டிஸன் வைத்தனர். ''மூன்று வருடத்தில் அரசியல் அமைப்பு சட்டத்தை முடிக்கணும். ஏற்கனவே 8 மாதம் முடிஞ்சிரிச்சி. இன்னும் 28 மாதமே உள்ளது. அதற்குள் முடித்தே தீரவேண்டும்''. மற்றவர்கள் அதற்கு தயாராய் இல்லையென்றாலும் பாபாசாகேப் சொன்னார் ''நான் முடித்து தருகிறேன்''.

அரசியல் அமைப்பு சட்டக்குழுவில் பொறுப்பேற்று, 3 வருடம் முடியும் முன்பே அதாவது 17 நாள் மீதம் வைத்தே (2 வருடம், 11 மாதம், 12 நாளில்) இதை முடித்தார். எந்த ரிசர்வேசனை ரத்து செய்யணும்னு காங்கிரஸார் முடிவு பண்ணினார்களோ அதை அடிப்படை சட்டமாக (Fundamental Rights) வைத்தார். இந்த அடிப்படை சட்டத்தின் அர்த்தம் என்னன்னா, ''அரசாங்கம் எக்காரணத்தைக் கொண்டும் இந்த அடிப்படை சட்டத்தில் கை வைக்கக் கூடாது'' என்பதே. அப்படி ஏதாவது பண்ணினால் அரசாங்கத்திற்கு எதிராய் மாபெரும் கிளர்ச்சி செய்யலாம். இந்த அடிப்படை சட்டம் என்பது நமது அரசியல் உரிமை. ஓட்டு போடுவது அடிப்படை உரிமை. ஆனால் இதில் பாபாசாகேப் முதலில் எழுதிய ''ஸ்டேட் சோசலிசம்'' இதில் வரவில்லை. அது எப்படி மாறியிருக்கிறது என்றால், இதை நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் கொள்கை (அல்லது) அரசாங்கம் மனம் வைத்தால் செய்யலாம் என்பதாக இருக்கிறது. அதாவது நமது பொருளாதார, சமூக உரிமை என்பது நமது அடிப்படை உரிமைகளில் வரவில்லை. அரசு விருப்பப்படி நடக்கிற விஷயமாய் மாறியிருக்கு அவ்வளவுதான். இதை நடைமுறைக்கு கொண்டுவர, உதாரணமா தமிழ்நாட்டில் 234 M.L.A. இருந்தால் அதில் 118 பேர் மனம் வைத்தால் அது சட்டமாகும். ஒவ்வொரு விவசாயிக்கும் நிலம் கொடுக்க வேண்டும் என்பது பூடகமாக உள்ளது. அவ்வளவுதான். ஆனா ஆட்சிக்கு வருபவர்கள் அனைவருமே மனுவாதியாயிருப்பதால், ''இவனுங்களுக்கு எந்த உரிமையும் கிடைக்ககூடாது'' என்பதை ஆளும் மற்றும் எதிர் கட்சிகளும் வரிந்துகட்டி வேலை செய்கிறார்கள். காரணம், ''கூலி வேலை செய்றவனெல்லாம் முதலாளியாயிட்டா, ஜமீன்தாருக்கு கூலி செய்ய எவன் போவான்?. காங்கிரசிலுள்ள எல்லோருமே ஜமீன்தார்கள். தமிழ்நாட்டில் மூப்பனார், ஓமந்த ரெட்டியார், ப. சிதம்பரம் எல்லாரும் ஜமீன்தார்கள்.

- தொடரும்

No comments: