Saturday, April 14, 2018

பாஜக குறித்து M Rajaவின் சிறப்பான நுண்ணரசியல் பதிவு...

அமித்ஷா பாக்க கோமாளி போல தெரிவாப்ல.. ஆனா இறங்கி அடிச்சா பூராப்பயலுக்கும் வில்லன் அவர்தான்..

குஜராத்லயும் உபிலயும் பிஜெபி எழுவதற்கு காரணம் அமித்ஷாவின்  மண்டையில் உதித்த ஐடியாலஜிதான்..
ஆளு படு டேலன்ட்டான ஆளு..

முதல்ல என்ன பன்னுவாங்கன்னா ஊரு ஊரா ஒரு சர்வே எடுக்குறது அதுல எந்த ஏரியாவுல எந்த சாதி வெயிட்டோ அதனுடைய செல்வாக்கான இரண்டாம் கட்ட தலைவர்களை மட்டும் காசை அடிச்சு வளைச்சுப் போட வேண்டியது..

பின்பு அவர்களது சாதி செல்வாக்கை பயன் படுத்தி கிளைகட்டமைப்புகளை ஏற்படுத்தி கட்சியை கடைசி கிராமங்களுக்கும் ஊடுருவ வைப்பது.. பின்புதான் இறங்கி அடிக்கிறது

பணம் பேசுற எடத்துல பணம்.. மதம் பேசுற எடத்துல மதம்.. சாதி பேசுற எடத்துல சாதி..
என்ன நடந்தாலும் சரி எவன் அழிஞ்சாலும் சரி ஆனா பாதி எடத்துல செயிக்கனும் இதுதான் அமித்ஷா ஃபார்முலா..

உதாரணமா தமிழ்நாட்டுல பாமாக வலுவா உள்ள இடத்துல அதன் இரண்டாம் கட்ட தலைவர் குருவை அல்லது வேல்முருகனை பிஜெபிக்குள்ள கொண்டு வந்தாலோ
முக்குலத்தோரில் சீதர் வாண்டையாரையோ சேதுராமனையோ
கவுண்டரில் தனியரசுவையோ ஈஸ்வரனையோ
பள்ளர்களில் கிருஷ்ணசாமியையோ அல்லது ஜான் பாண்டியனையோ..
அவர்களது கட்சியை கலைத்துவிட்டோ அல்லது கட்சியைவிட்டு வெளியேற்றியோ பிஜெபியில் ஒரு தலைவராக்குவது..
அவர்கள் ஒத்துவரவில்லையென்றால் அவர்களுக்கு அடுத்து உள்ளவர்களை உடைத்து வெளியேகொண்டு வந்து பிஜேபியை கிராமங்களில் ஊடுருவ வைப்பது..

பின்பு பணத்தை இறக்கி குறைந்தது அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு இருபது சீட்டுகளை பிடிப்பது.. இப்படியாகத்தான் அவர்கள் திட்டம் போகும்

ஏன் அதற்கு பாமகவுடனோ அல்லது கொங்கு முன்னேற்ற கழகத்துடனோ நேடியாகவே கூட்டணி வைக்கலாமே என்கிறீர்களா அங்குதான் அமித்ஷாவின் மூளை..

கட்சியோடு கூட்டணி வைத்தால் கட்சி வளராது காரணம் பிஜெபிக்கென செல்வாக்கான தலைமை கிடைக்காது அதைவிட ஒரு கட்சியை உடைத்தால் ஒரு தலைவரும் கிடைப்பார் அவரை பின்பற்றும் தொண்டரும் கிடைப்பார் தோல்வியை தழுவினாலும் கட்சி செல்வாக்காகிவிடும்..

இந்த ஃபார்முலா எல்லா மாநிலத்திலும் வெற்றி.. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் ஏன் பருப்பு வேகலைனா.. இங்க சாமானியனிலிருந்து தலைவன்வரை ஏன் எதற்கு எப்படின்னு பகுத்தறிவுக் கொஸ்டினப் போட்டுட்டே திரிவானுக.. ஆன்சர்ல லேசா பிசிரு தட்டுனாலும் ரிவிட்டு வுழுகும்...

No comments: