Sunday, March 15, 2020

உடல் எடை குறைய எப்படிச் சாப்பிட வேண்டும்?

உடல் எடை குறைய எப்படிச் சாப்பிட வேண்டும்?

How to eat to lose weight?


சாப்பிடுவதற்கும் உடல் எடைக்கும் நெருங்கிய உறவு உண்டு. 

There is a close relationship between eating and body weight.

காலைச் சிற்றுண்டியை அதிக அளவிலும் சரிவிகிதமாகக் கலந்தும் சாப்பிடுவது மிகவும் நல்லது.

It is good to eat breakfast in large quantities and in equal proportions.


மதியத்திலும் இரவிலும் சாப்பிடும் அளவைக் குறைப்பது அவசியம். 

Reducing the amount of eating in the afternoon and at night is very important.

இப்படி உணவு உண்டால் உடல் பருமன் குறைவதுடன், உயர் ரத்த சர்க்கரை அளவும் குறையும். 

Eating in this way will reduce obesity and high blood sugar.

இரவில் உணவைக் குறைத்தால்தான் செரிமானம் சரியாக இருக்கும். கொழுப்பும் சர்க்கரையும் ரத்தத்தில் அதிகமாகாது. 

Eating less at night helps digestion. Thus fat and sugar will not be high in blood.

ஜெர்மனியின் லுபெக் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வு பின்வருபவற்றை தெரிவிக்கிறது...

A study by the University of Lubeck, Germany, suggests the following...

உடலானது சாப்பிட்டதை செரிமானம் செய்வதற்கும் ஊட்டச்சத்துக்களை பிரித்தெடுத்து உரிய இடத்திற்கு எடுத்துச் செல்லவும் ஆற்றலை செலவிடுகிறது.

The body expends energy to digest what is eaten, extract nutrients and to take it to the proper locations.


இதை உணவால் தூண்டப்படும் வெப்ப உருவாக்கம் என்பார்கள். 

This is called food-induced heat generation.


வளர்ச்சிதை மாற்றம் எப்படி நமக்குள் வேலை செய்கிறது என்பதை வெப்ப உருவாக்கத் தன்மையிலிருந்து தெரிந்துகொள்ளலாம். 

We can learn from the heat generation process how metabolism works within us.

இது சாப்பிடும் வேளைகளைப் பொறுத்து மாறுபடும். 

It varies depending on when we eat.

காலை உணவில் உள்ள கலோரிகள் எந்த அளவாக இருந்தாலும் வெப்ப உருவாக்கம் இரட்டிப்பாக நடக்கிறது.

No matter what the calories in the breakfast, the heat buildup happens twice.

மதியம், இரவு வேளைகளில் வெப்ப உருவாக்கும் குறைகிறது. 

The great builds up drops down in the afternoon and night.

எனவே நண்பர்களே! உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

So Friends! Take Care of your health.

No comments: